Monday, February 19, 2018 08:56:07 PM

பொன்சேகாவின் சாட்சியத்தினூடு ‘வெள்ளைக்கொடி’ விவகாரத்தில் நீதி கிடைக்கலாம்: சந்திரநேரு சந்திரகாந்தன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Mar 15, 10:12 am

Chandranehru Chandrakanthanமுன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவின் இறுதி மோதல்கள் தொடர்பிலான கருத்துக்கள்,

வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றவர்களை படுகொலை செய்த விவகாரத்தில் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் சாத்தியங்களை உருவாக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வெள்ளைக் கொடி விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார். அதில், இறுதி மோதல்களில் இடம்பெற்ற முக்கியமான விடயங்கள் தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

இந்த நிலையில், இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் சர்வதேச நாடுகள் உள்ளிட்ட தரப்புக்களோடு விடுதலைப் புலிகளை சரணடைய வைப்பது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தன் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் அமைச்சராக இருக்கின்ற சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றன….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.