Wednesday, February 21, 2018 06:08:23 PM

இலங்கை நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

By BBC Tamil - முகப்பு - Thu Jun 09, 9:45 am

இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் 94 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

Image copyright
Getty

Image caption

இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

இதனை, வாக்கெடுப்பின் பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

தீர்மானத்திற்கு ஆதரவாக 51 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக 145 வாக்குகள் கிடைத்தன.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும், கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்களுடன் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, கடந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொருளாதாரம் தொடர்பாக தவறான புள்ளி விவிரங்களை நாடாளுமன்றதில் சமர்ப்பித்துள்ளதாக குற்றம் சாட்டினார்….

Leave a Reply

Comments are closed on this post.