Tuesday, January 16, 2018 02:22:48 PM

‘விமல் வீரவன்ஸ மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்’

Photo Gallery1 Photo By BBC Tamil - Fri Jun 03, 5:01 am

ஐ.நாவின் கொழும்பு காரியாலயம் முன்பாக சட்ட விரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய உள்ளதாக போலீஸார் இன்று கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம், ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹுசெயின் இலங்கையில் விஜயம் மேற்கொண்டார்.

இதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, வீரகுமார திசாநாயக்க, ஜயந்த சமரவிர உட்பட தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்தவர்கள் ஐ.நாவின் கொழும்பு காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தினார்கள்

அப்போது அந்த வீதியில் பயணித்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்தாக போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.