கவிதை: செத்த தாய் முலை கொடுத்தாள்
விண்முட்ட விஞ்ஞானம் வினைத்திறனாய் ஆராய்ச்சி கண் மாற்ற கால் மாற்ற கலர் மாற்ற- தலை மயிர்மாற்ற கணக்கில்லா பெரு சிகிச்சை. புல்லுக்கு வயதென்ன பூண்டுக்கும் உயிர் உண்டோ நத்தைக்கும் எறும்புக்கும் சித்தங்கலங்காமல் மெத்தப்படித்த பலர் சுற்றி நின்று நடைப்பயிற்சி, நில்லாமல் நெடு வழியும் நீண்ட நேய மனம். நல்லோர் புதிய யுகம் நாம் காண்போம் என்று குரல். நல்லாய்த்தான் இருந்தாலும் நாங்கள் இதில் சேர்ப்பில்லை, ஓசோனில் ஓட்டை உலகெங்கும் மாநாடு தென் துருவ பனி கரைய திகைப்புடனே ஆய்ந்தறிவு பல நூறு ஆண்டு -முன் செத்த படு குழிக்கு மெத்த நூதனமாய் அகழ்வாய்வு ஒரு பக்கம். நல்லாய்த்தான் இருந்தாலும் நாங்கள் இதில் சேர்ப்பில்லை, பூவுக்கும் வேருக்கும் நோகாமல் பிடுங்கி எழ நூறுக்கும் மேலான நிபுணர் குழு கூட்டம். காடழிக்கக்கூடாது. கடலழியக்கூடாது. காட்டு விலங்குகளும் கவலை கொள்ளக்கூடாது., நல்லாய்த்தான் இருந்தாலும் நாங்கள் [...]Continue