Sunday, February 18, 2018 01:17:18 PM

புத்த கோயிலில் 40 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிப்பு

By BBC Tamil - Wed Jun 01, 6:47 am

தாய்லாந்தில் உள்ள புத்த கோயிலில் குளிர் சாதன பெட்டி ஒன்றில் நாற்பது புலிக் குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Image copyright
AFP

இந்தக் கோயிலின் மூலம், வன உயிர்கள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது .

கான்சனாபுரி மாகாணத்தில் உள்ள இந்த இடத்தில் இருந்து 130 உயிருள்ள புலிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் போது இறந்து கிடந்த புலிக்குட்டிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ள இந்தப் புலிக்கோயில் மூலம் வருடத்திற்கு பல மில்லியன் டாலர் அளவு வருமானம் வருகிறது.

விலங்கின ஆர்வலர்கள் இந்த புலிக் கோயிலை மூடுவதற்காக நெடுங்காலமாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர்.

Leave a Reply

Comments are closed on this post.