Tuesday, January 16, 2018 02:23:23 AM

வடக்கு மக்களுக்கு நோர்வே தொடர்ந்து உதவும்: டொரே ஹேடர்ம்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Jun 01, 9:39 am

meenavarவடக்கில் மீள்குடியேற்றம் உள்ளிட்ட செயற்திட்டங்களுக்கு நோர்வே தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் தெரிவித்துள்ளார்.

நோர்வே உதவியோடு யாழ்ப்பாணம் வளலாய் பகுதியில் முன்னெடுக்கப்படும் உதவித் திட்டமொன்றினை கண்காணிப்பதற்காக இன்று புதன்கிழமை விஜயம் செய்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

டொரே ஹேடர்ம் தெரிவித்துள்ளதாவது, “உங்களது அழகிய நாட்டிற்கு மீள வரக்கிடைத்தமையிட்டு மிகவும் மகிழ்கிறேன். இலங்கை என்பது எனக்கு விஷேமானது. நோர்வேயின் தூதுவராக ஏழு ஆண்டுகளுக்கு முன் கிடைத்த நல்ல நினைவுகளை அடிக்கடி எண்ணிப்பார்ப்பதுண்டு. புதிதாக விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தின் வளலாய் பகுதியில் இன்று நோர்வேஜியத் தூதராலயத்தின் எனது சகாக்களுடனுடன் ஐ.நாவின் அலுவலர்களுடனும் இந்நிகழ்வில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.