ஏசியில் இருந்த கனிமொழி இன்று பாசி படிந்த வடவர் சிறையில்

ஆயிரம் அக்கா போட இளைஞர் அணி, ரெண்டும் ரெண்டும் பத்து என்றால் அதையும் ஆமோதிக்க கழகத் தொண்டர்கள்.

பக்கத்தில் நின்று போட்டோ எடுக்க போனால் இரகசியமாக ஒரு லட்சம் கேட்கும் கழக வீரர்கள், திரைப்பட உலகில் சலாமடிப்பவர்களுக்கு விசேட விருது, கனிமொழிக்கு வேண்டியவர் அவரைப் பகைக்கக் கூடாது என்று பல கோமாளி டைரக்டர்களுக்கு மரியாதை என்று கிடந்த தமிழக அரசியலில் இன்று கனிமொழியின் நிலை பலருக்கு பாடமாகியுள்ளது.

திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 சதுர அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனிமொழி திஹார் சிறையின் மகளிர் சிறைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் எந்த வசதியும் இல்லாத அறை அது.

43 வயதான கனிமொழியின் சிறை வாழ்க்கை குறித்த ஒரு பார்வை…

நேற்று மாலை திஹார் சிறைக்கு கனிமொழி கொண்டு செல்லப்பட்டார். கண்கலங்கிய நிலையில் பாட்டியாலா கோர்ட் லாக்கப்பிலிருந்து போலீஸ் வேனில் ஏற்றப்பட்டபோது அவர் மீண்டும் கலங்கினார்.

வேனில் அவருக்குப் பாதுகாப்பாக வந்த திஹார் சிறைக் காவலர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் கனிமொழியுடன் தமிழில் பேசவே சற்று ஆறுதலடைந்தார் கனிமொழி. அவர்களுடன் தமிழில் உரையாடியபடி சிறைக்கு வந்து சேர்ந்தார்.

நீங்கள் எந்த ஊர், எப்போது முதல் இங்கு பணியாற்றுகிறீர்கள், டெல்லியில் வேலை எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டுக் கொண்டே வந்தாராம் கனிமொழி.

சிறைக்கு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு சிறை விதிமுறைகள் விளக்கிச் சொல்லப்பட்டது. அதை அவர் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். பின்னர் சிறை விதிமுறைகளின்படி சில ஆபரணங்களை அவர் கழற்றிக் கொடுத்து விட்டார். அவரது முகத்திற்கு அழகூட்டும் மூக்குத்தியும் அதில் ஒன்று.

மூக்குக் கண்ணாடி, சிறிய கைப்பை, சில புத்தகங்களை மட்டும் உடன் வைத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை சிறைக் காவலர்கள் 8ம் எண் அறைக்குக் கொண்டு சென்று விட்டனர். அது மிகச் சிறிய அறை. அந்த அறையில் ஒரு கழிப்பறை மற்றும் படுத்துத் தூங்குதவற்காக ஒரு சிறிய மேடை போன்ற இடம் ஆகியவை மட்டும் உள்ளன.

கனிமொழியின் கண்ணியத்தைப் பாராட்டிய சிபிஐ நீதிபதி அவர் தொலைக்காட்சி வைத்துக் கொள்ளலாம், மின்விசிறி சலுகை தரலாம் என சில சலுகைகளை அறிவித்திருந்தார். அதன்படி கனிமொழி டிவி, செய்தித் தாள்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்விசிறி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறைக்குள்தான் தனது சிறை வாழ்க்கையை கழித்தாக வேண்டும் கனிமொழி. இங்கேயே குளித்துக் கொள்ளலாம். ஆனால் வாளியில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு குளித்துக் கொள்ளலாம். கழிப்பறை உள்ள பகுதியில்தான் அவர் குளிக்க வேண்டும். அதற்கும், தூங்கும் இடத்திற்கும் இடையே தடுப்பு ஏதும் கிடையாது. துணியால் மறைத்தபடி அதைப் பிரித்துக் கொள்ளலாம்.

கனிமொழி தென்னிந்திய உணவு வகைகளை வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை சாப்பிட நீதிபதி அனுமதித்துள்ளார். மருந்துகளையும் அவருக்குக் கொண்டு வந்து கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமான சாப்பாட்டை சாப்பிட கனிமொழிக்கு தடை இல்லை.

இருப்பினும் இவை தவிரகனிமொழிக்கென்று வேறு எந்த சிறப்புச் சலுகையும் தரப்பட மாட்டாது. வழக்கமான கைதிகளைப் போலவே அவர் நடத்தப்படுவார் என்று சிறையின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் குப்தா கூறியுள்ளார். மேலும், அவருக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனிமொழி விஐபி கைதி என்பதால் அவரைத் தாக்கி தங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்ள சிலர் முயலலாம் என்பதால் அது நடந்து விடாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது அறைக்கு முன்பு 24 மணி நேர பாதுகாப்பு தரப்படும் என்றும், கனிமொழியுடன் ஒரு பாதுகாவலர் எப்போதும் இருப்பார் என்றும் குப்தா கூறியுள்ளார்.

தனது அறை உள்ள பகுதியையொட்டியுள்ள அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் கனிமொழி பேசத் தடை இல்லை. அதேசமயம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளவர்களுடன் பேச அவருக்கு அனுமதி கிடையாது.

கனிமொழி விசாரணைக் கைதி என்பதால் அவர் வழக்கமான உடைகளை அணிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் நாள் இரவை கனிமொழி நல்ல தூக்கத்தின் மூலம் கழித்தாராம். இரவு 11 மணிக்குத் தூங்கிய கனிமொழி காலை ஐந்தரை மணியளவில் எழுந்துள்ளார். கோர்ட்டுக்குக் கிளம்ப தயாரானார்.

நேற்று இரவும், இன்று காலையும் அவர் சிறையில் கொடுத்த உணவையே சாப்பிட்டுள்ளார்.

ஜாமீன் கிடைக்கும் வரை இந்த குறுகிய அறைக்குள்தான் கனிமொழி தங்கியிருக்க வேண்டும்.


Continue

1 Comment

  1. Nalliah Thayabharan says:

    முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனையில் 1968 ஜனவரி முதலாந் திகதி  ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு கனிமொழி என்ற  பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி?என்ற ஒரு சிறிய  செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?ராசாத்தி என்றழைக்கப்படும் .தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’ என்று கூறி முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார் . நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி .எந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி மறுத்தாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.
    கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில் எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா….கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல ‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?, காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?; எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா?, எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?
    நல்லையா தயாபரன்

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image

This option will reset the home page of Adadaa.net – All Tamil news in one place restoring closed widgets and categories.

Reset Adadaa.net – All Tamil news in one place homepage