Sunday, February 18, 2018 01:17:02 PM

இலங்கை மழை வெள்ளம், நிலச்சரிவு: 92 ஆக அதிகரித்த உயிரிழப்பு

By BBC Tamil - Mon May 23, 2:28 am

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.

மழை வெள்ளம் தற்போது குறைந்து வருவதால் கணிசமான குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இடர் முகாமைத்துவ அமைச்சகத்தினால் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 86 ஆயிரமாக குறைந்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளான கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களை கொண்ட மேல் மாகாணத்தில் ஏற்கனவே 60 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த இரண்டு லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 37 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 70 ஆயிரமாக குறைந்துள்ளது.

Image copyright
Getty

இந்த நிலையில், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைந்தும் வருகின்றது….

Leave a Reply

Comments are closed on this post.