Wednesday, February 21, 2018 06:14:44 PM

இலங்கையில் தொடரும் நிலச்சரிவுகள்: மேலும் 14 பேரைக் காணவில்லை

By BBC Tamil - Wed May 18, 12:55 am

இலங்கையில் தொடரும் நிலச்சரிவுகளில், கேகாலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் நடைபெற்ற மற்றுமோர் சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

Image caption

தொடரும் நிலச்சரிவுகளில் மேலும் 14 பேர் காணவில்லை

இந்த சம்பவத்தில் 16 பேர் காணாமல் போயுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இருவர் சடலமாக மீட்பு பணியாளர்களினால் மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையத்தின் துணை இயக்குநரான பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

கேகாலை புலத்கோபிட்டிய பிரதேசத்திலுள்ள கலுபானவிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், நேற்றிரவு (செவ்வாய்கிழமை) இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஒன்பது குடியிருப்புகளை கொண்ட இந்த குடியிருப்பு பகுதியில் நிலம் சரிந்து விழுந்தமையால், ஆறு குடியிருப்புகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக காவல் துறை கூறுகின்றது.

இந்த சம்பவத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 6 பேர் மீட்பு பணியாளர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Comments are closed on this post.