Tuesday, January 16, 2018 02:24:10 AM

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நாளை முள்ளிவாய்க்காலில்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue May 17, 8:47 am

May 18, 2009வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்துள்ள ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “’2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள். தமிழரின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த நாள். இந்நாளை எமது தமிழ் மக்கள் இரத்தசரித்திரம் எழுதிய துக்கதினமாக வரலாறு உள்ளவரை அனுஷ்டிக்க வேண்டும்.

கடந்த 2015ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்குமாக நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இம்முறையும் மே மாதம் 18ஆம் திகதி இவ்வாறான நிகழ்வை அனுஷ்டிப்பதற்கான ஒழுங்குகள் வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மாகாண முதலமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் இதில் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.