Tamil Nadu,  War of Tamil Eelam

தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? – 02

முதலில் எனது பதிவில் உள்ள இடுகைக்கு [தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்?] வருகைதந்து நூலகம் குழுமத்திற்கு இணைப்பு தந்து உதவிய “nameless” அவர்களுக்கும், விண்ணாணம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இங்கே எழதப்படும் பதில்கள் யாவும் தேன்கூடு தள ஆளுநர்களுக்காக என்று நான் சொல்லவில்லை. இதை பொதுவாகவே எழுதுகிறேன். ஏனெனில், அவர்கள் எனக்கு இப்படியான மடல்கள், நூலகம் கூகிள் குழுமத்தில் இடப்பட்டுள்ளது போல், எதையும் அனுப்பியது கிடையாது. ஆதலால் அவர்களுக்கு என்று என்னால் பதில் போட இயலாமலுள்ளது.

இதுவரைக்கும், தேன்கூடு தள ஆளுநர்கள் எனக்கு எந்த வித காரணமும் சொல்லவில்லை. அவர்கள் அனுப்பிய அத்தனை மடல்களும் எனது மேற்குறிப்பிடப்பட்ட இடுகையில் பதிவி செய்துள்ளேன்.

24 மணி நேரத்திற்கும் என் பதிவை இணைத்தவர்கள் [தடைசெய்யப்பட்டது என்று நான் அறிந்து] 29 நாட்கள் (இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்) ஆகியும் எந்த வித காரணமும் இதுவரைக்கும் சொல்லவில்லை.

என் இடுகையில் நான் சொன்னதுபோல், இப்படியான தளங்கள் இருக்கு என்று தெரிந்த பின் நான் பதிவைத் தொடங்கவில்லை. ஆதலால், இவர்கள் இணைக்காவிட்டாலும், நான் பதிவை நிறுத்த மாட்டேன்.

எனது பதிவு, ஒரு பார்வை, வேறு எந்த செய்தி இணையத்தளத்திலிருந்தோ (அ) வேறு எங்கு இருந்தோ நான் வெட்டி ஒட்டவில்லை. விருப்பமென்றால் நீங்கள் போய்ப் பார்க்கலாம்.

அவர்களது மடல்களை நான் மற்றய குழுமங்களில் போடவில்லை என்று குறை கூறியிருந்தார்கள். நான் கேட்ட முதல் கேள்விக்கே பதில் வரவில்லை இன்னும், பிறகென்னெண்டு கருத்து போடுவது? அவர்களுடனான எனது தொடர்புகளை எனது பதிவில் அன்றன்றைக்கே போட்டிருக்கிறேன் [திகதி, மணி வாரியாக].

எனது பதிவை தடைசெய்துவிட்டு, அதை கண்காணிக்கிறோம் என்று சொன்னவர்களுக்கு அதே பதிவில் நான் இட்ட இடுகை எப்படி தெரியாமல் போனது? உண்மையில் அவர்கள் எனது பதிவை கண்காணித்திருந்தால் எனது இடுகையை தவறவிட்டிருக்க இயலாது. அந்த தேன்கூடு – ஏன் என்னை தடைசெய்தாய்? என்ற இடுகை பல நாட்களாக முதலாவதாக இருந்தே பின் பிற இடுகைகளை போட அரம்பித்தேன். போதாததற்கு “தேன்கூடு” என்ற சொல்லை கூகிளில் தேடினால், எனது இடுகை இரண்டாவதாக வரும் [தேன்கூடு தளம் தான் முதலாவது].

உண்மையில், எனது பதிவை தடைசெய்தபோது, எனது பதிவைத்தான் தடைசெய்தார்கள் என்று நினைத்தேன். பலரின் கருத்துக்களுக்குப் பின் தான் தெரிகிறது, பலரின் பதிவுகள் தடைசெய்யப்பட்டு உள்ளது என்று.

ஆனால், ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இப்படிப்பட்ட சில ஈழ எதிர்ப்பாளர்களால், ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுமே தமிழீழ மக்களுக்கு உதவவில்லை என்ற கருத்தே மேம்படுகிறது. இருந்தாலும் இப்படியான எதிர்ப்புகளுக்கும், சட்ட சிக்கல்களுக்கும் மத்தியிலும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பலர் உதவிக்கொண்டு தான் இருக்கிறார்கள், தமிழ் நாட்டில். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

பாகம் – 03 >>

<< பாகம் – 01

_____
CAPital

 

சேர்க்கப்பட்டது I [GMT 2006/09/03 @ 12:07]

Dear Mr.Capital,

First of all sorry for the inconvenience and thanks for your patience. Recently your blog has been included for aggregation in Thenkoodu.com – Tamil Blogs Portal. Due to heavy work pressure, and some of our team members were not around, we were not able to work on your issue as we thought we could be. 🙁

What happened?

As we have informed earlier in our mail (dated 13th), your blog received complaints on the category such as promoting hate. When we put a blog which is already being aggregated on hold, we used to update the status message/send a mail to the blogger and wait for there response.

In case if we have done any mistake, mis-understanding or the blogger has a valid reason, we used to receive a reply from the blogger, and based on which we act immediately.

Meanwhile, we also refer the blog to our review team and collect there feedback and review. Unfortunately, we could not complete this section of review as we planned, due to the limitation of resources and the reasons we mentioned above.
Why your blog was included? Is your blog is OK from review?!

To be frank, we have not done any review on your blog yet, because we could not even find time to visit your blog. However, we were happen to see your explanation about your posts in another forum, and based on which we have just included you. We appreciate if possible, such concerns are shared with us or at least we are left with a note after the post! 🙂

By the way, we are not sure whether you are aware that, NOT all of us know Tamil. 🙂

Hence please be prepared for the delays in response at times! 🙂

We thank you for your co-operation and understanding. Happy Blogging!

Regards,
– Team.

மேலே உள்ள emoticans உம் மடலில் வந்ததுவே.

2 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image