எதெதெற்கோ கவிதை எழுதினேன்
உனக்கு மட்டும் வருதில்லையே
என்னை ஏங்க வைக்காமல் இருந்ததற்கா?

நான் பார்க்காத அன்பு காட்டி
எனை ஏன் மறக்க வைத்தாய்?
நான் கேட்காத பாசம் தந்து
எனை ஏன் பிர‌காசிக்க‌ வைத்தாய்?
நான் நினைக்காத குடும்பம் காட்டி
எனை ஏன் இல‌யிக்க‌ வைத்தாய்?
நான் ஏங்காத காதல் செய்து
எனை ஏன் ஏங்காமல் வைத்தாய்?
பார் [world] கேட்டதெல்லாம்,
கேட்காமல் கிடைப்பதால்
உனக்காக கவிதை ஒன்றும் வருகுதில்லையே

நீயே தான் குற்றவாளி

நீதிபதியே,
என் இயலாமைக்கு
இவள் மேல் தான் குற்றம்.
கணவனின் தலையாய கடமையாக – நான்
குறைந்த பட்சம்
ஒரு கவிதையாவது எழுதிக் கொடுக்கவில்லை.

எனை ஏங்க வைக்காமல் காதலித்ததால்
அவள் என்னை விட அன்பு காட்டியதால்
அழகிய குடும்பம் ஒன்றை ஆசையாக கட்டியதால்

நான் கேட்டதெல்லாம்,
கேட்காமலே கிடைக்கச் செய்த‌தால்
எங்கு போவது – நான்
எங்கித் தவித்து
மனம் உருகி ஒரு காதல் கவிதை எழுத.

2 Replies to “க‌விதை வ‌ருதில்லையே…”

  1. நீ எங்கித் தவித்து
    மனம் உருகி ஒரு காதல் கவிதை எழுதும் வேதனைகூட உனக்கு வேண்டாம் என் அன்பே

    நீ நினைத்து சிந்திக்கும்
    கவிதையாக உரு மாறி உன் முன் நடந்து வரும்வேன் நீ நினைக்கும் போது என் உயிரே

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image