Sunday, February 18, 2018 01:16:16 PM

மீனவர் பிரச்சனை உட்பட பல விஷயங்கள் குறித்து மைத்திரி-மோடி பேச்சு

By BBC Tamil - Sat May 14, 7:55 am

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் நரேந்திர மோடியும் டில்லியில் கலந்துரையாடியுள்ளனர்.

Image copyright
PFB

Image caption

மைத்திரி மோடிக்கிடையிலான நேற்றைய சந்திப்பின்போது

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோடியை டில்லயிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதன்போது மீனவர்கள் பிரச்சனை, வர்த்தகம், பிராந்திய பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார் எனவும் இலங்கை ஜனாதிபதி அலுவலகம் கூறுகிறது.

Image copyright
PFB

மீனவர் பிரச்சினைக்கு விரைவாக நிரந்தரமான தீர்வை எட்டுவது மிகவும் முக்கியமானது என்றும் அது காலத்தின் தேவை என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார் எனவும் இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Comments are closed on this post.