Tuesday, January 16, 2018 02:14:32 AM

நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவை: சையிட் அல் ஹூசைன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Mar 11, 9:46 am

UNHRC NEW Headநல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் நிலைத்திருக்கக் கூடிய சமாதானம் என்பவற்றை நிறைவேற்றுவதற்கான சுய பயணத்தை நோக்கி இலங்கை செல்வது மதிக்கப்படவேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31வது அமர்வில் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது இவ்விடயங்களைக் கூறியுள்ளார்.

அரசியலமைப்பை மறுசீரமைத்தல், சுயாதீன நிறுவனங்களை புதுப்பித்தல் மற்றும் கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கான சூழ்நிலையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பில் முக்கியமான நடவடிக்கைகள் இலங்கையினால் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சையிட் அல் ஹூசைன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பலமான சமிக்ஜைகள் தென்படுகின்றன. தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுகின்றமை, இராணுவ வசமிருந்த காணிகளை விடுவிப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், காணாமற்போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றை குறிப்பிட்டுக் கூறலாம்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.