Friday, January 19, 2018 12:07:37 AM

ஊழல் யுகத்தைக் கடந்து வந்துள்ள இலங்கை; இன்று ஊழலுக்கு எதிராக கைகோர்த்துள்ளது: ஜனாதிபதி

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri May 13, 9:15 am

maithஊழல், அரசியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாரிய குற்றச்சாட்டுக்களைக் கொண்ட ஒரு யுகத்தை கடந்து வந்துள்ள இலங்கை,

இன்று சர்வதேச நாடுகளுடன் ஊழலுக்கு எதிராக கைகோர்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இடம்பெறும் ஊழலுக்கு எதிரான மாநாட்டில் நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளதாவது, “ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்தமைக்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று உலகெங்கிலும் பரவியிருக்கும் ஊழலுக்கெதிராக போராடும் முன்னணியாக எமது உள்ளங்களை இணைப்பதற்கு எடுக்கப்படும் ஒரு விசேட நடவடிக்கையாக இந்த மாநாட்டைக் குறிப்பிட முடியும்.

ஊழல், அரசியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாரிய குற்றச்சாட்டுக்களைக் கொண்ட ஒரு யுகத்தை இலங்கை கடந்துள்ளது. அந்த நிலைமைகளுக்கெதிராக மக்கள் வெளிப்படுத்திய அக்கறையின் பிரதிபலனாக 2015 ஜனாதிபதித் தேர்தலில் அந்த ஆட்சியை மாற்றி நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.