Monday, March 30, 2020 01:24:31 AM

முற்றுகின்றது முறுகல்: கோத்தாவிற்கு சேறடிப்பாம்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Dec 05, 2:11 am

  • Read full article | 
  • Comments Off on முற்றுகின்றது முறுகல்: கோத்தாவிற்கு சேறடிப்பாம்!
  • 5 views

இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர்,

கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்ற சம்பவம், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சேறுபூசும் முயற்சியாக இருக்கலாம் என, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

ஊழியர் கடத்தல் விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகள் குறித்து, இலங்கையின் சுவிட்ஸர்லாந்து தூதரகம் உள்ளிட்ட அனைத்துத் தூதரக தூதுவர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடத்தல் என்று கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்புடைய விசாரணைகளை நோக்கும்போது, புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியைத் தவறாக சித்திரிக்கும் ஒரு செயலாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார். “பெண் கடத்தப்பட்டார் என்று, சுவிஸ் தூதரகத்தால் வழங்கப்பட்ட சில தரவுகளில் உண்மை நிலை இல்லை” என்றார்.

எவ்வாறாயினும், இந்நிகழ்வு நடைபெற்ற தினத்தன்று எடுக்கப்பட்ட தரவுகளும் வழங்கப்பட்ட தரவுகளும் ஒன்றுக்கு ஒன்று முரணாகக் காணப்படுவதாகவும் அது ஒன்றுடனொன்று பொருந்தவில்லை என்றும் அவர் கூறினார்.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on முற்றுகின்றது முறுகல்: கோத்தாவிற்கு சேறடிப்பாம்!
  • 5 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar