Wednesday, August 12, 2020 11:10:38 PM

இந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Dec 04, 1:40 am

  • Read full article | 
  • Comments Off on இந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்!
  • 63 views

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள், இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருணத்தில்,

“…தென் இலங்கையின் ஒவ்வொரு பௌத்த விகாரைகளுக்குள்ளும் இருந்து, ராஜபக்ஷக்களின் வெற்றி கட்டமைக்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவே வெற்றிபெறுவார். ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மாத்திரமே, சஜித் பிரேமதாஸ வெற்றிபெறுவார். ஆனாலும், நாங்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு, ராஜபக்ஷக்களைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்…” என்று அப்போதைய அமைச்சரான மனோ கணேசன், இந்தப் பத்தியாளரிடம் கூறினார். தேர்தலுக்குப் பின்னர் இதை, அவர் தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதியுமிருந்தார்.

இலங்கையில் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான கருவியாக, ‘போர் வெற்றிவாதம்’ காலங்காலமாகக் கொண்டு சுமக்கப்படுகின்றது. ஓர் இனத்துக்கோ, மதத்துக்கோ, சமூகத்துக்கோ, பிராந்தியத்துக்கோ, நாட்டுக்கோ எதிராகப் போர் வெற்றிவாதத்தை முன்னிறுத்தும் போது, அதன் கீழ் மக்களை ஒருங்கிணைப்பது இலகுவானது.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on இந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்!
  • 63 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar