Tuesday, December 10, 2019 03:59:58 AM

தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்.!

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Nov 29, 10:23 am

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கீழ் ஒரு போராளியாக, பொறுப்பாளராக,

தளபதியாக இருந்து செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பும் உளவியல் போரை நடத்த சிங்கள அரசாங்கம் முனைகிறது. எனவே நாம் அவர்களின் உளவியல் போரை முறியடிக்க வேண்டும். எனவே மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற் படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கும் தேசியத்தலைவர் அவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் இருப்பதாக சில பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமாக தங்களின் கருத்தை இவ்விடத்தில் கூறிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் மாவீரர்களின் பெற்றோர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image

Skip to toolbar