Thursday, July 2, 2020 07:23:09 PM

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம்; மஹிந்த- சுவிஸ் தூதுவர் பேச்சு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Nov 28, 2:18 am

  • Read full article | 
  • Comments Off on சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம்; மஹிந்த- சுவிஸ் தூதுவர் பேச்சு!
  • 15 views

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பெடர் மொக் (Hanspeter Mock) இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கலந்துரையாட இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை சுவிட்சர்லாந்து தூதரகத்தில் சேவை செய்யும் பெண் பணியாளர் ஒருவர், வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டு சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்துக்கு குடும்பத்துடன் சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, கடத்தல்காரர்கள் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நிஷாந்த டி சில்வா முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம்; மஹிந்த- சுவிஸ் தூதுவர் பேச்சு!
  • 15 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar