Monday, December 11, 2017 06:16:33 AM

9 மாதங்களில் 8 நாடுகளுக்கு சென்ற விமானப்படை தளபதி! அதிருப்தியில் ஜனாதிபதி

Photo Gallery1 Photo By thiru - Mon May 09, 11:38 am

srilanka airlinesஇலங்கை விமானப்படை தளபதி, அதிகளவான வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

விமான படை தளபதியாக ககன் புலத் சிங்கள நியமிக்கப்பட்டு 9 மாதங்களுக்குள் 8 நாடுகளுக்கு சென்றமையே இந்த சாதனையாகும்.

இறுதி விஜயமாக மூன்றரை வார ரஷ்ய விஜயத்தை நிறைவு செய்து கொண்டு ககன் புலத்சிங்கள கடந்த வாரமே இலங்கை திரும்பியுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானபடை தளபதிகள் தமது முதல் வெளிநாட்டு விஜயத்தை பதவியேற்று ஒரு வருடத்தின் பின்னரே மேற்கொண்டுள்ளனர்.

விமானபடை தளபதி பதவி உட்பட விமான படையை உரிய முறையில் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக குறைந்த பட்சம் ஒரு வருடம் செல்வதனால், நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு செல்வதற்கு அவர்களுக்கு ஒரு வருட காலம் தேவைப்படுகின்றது.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.