Friday, January 19, 2018 12:05:28 AM

வடக்கு, கிழக்கு பகுதியில் இரு இடங்களில் ​முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது

Photo Gallery1 Photo By thiru - Thu May 05, 6:03 am

46051முள்ளியவாய்க்கால் நினைவேந்தல் நாள் வடக்கு, கிழக்கு பகுதியில் இரு இடங்களில் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து தமிழ் உறவுகளையும் அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணணி இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 07ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பி.ப 4.00 மணிக்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் மு.ப 10.00 மணிக்கும் மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.