Wednesday, February 21, 2018 06:18:00 PM

கிழக்கு தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கின்றது

Photo Gallery1 Photo By BBC Tamil - Thu Apr 28, 11:15 am

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி துவங்கிய போராட்டம் தொடர்கின்றது.

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறித்திருந்த இருவரில் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் ஆம்பியுலன்ஸ் வண்டி மூலம் திருகோணமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்றையவர் உடல் பலவீனமடைந்த நிலையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக பிபிசியின் செய்தியாளர் கூறுகின்றார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பாக, மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் சுழற்சி முறையிலான உண்ணர்விரத போராட்டத்தினை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்றுப் பகல் முதல் இரண்டு தொண்டர் ஆசிரியர்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் பேராட்டத்தை துவங்குவதாக அறிவித்தனர்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.