Monday, February 19, 2018 08:48:44 PM

புதிய அரசியல் அமைப்பு விவகாரம்! கூட்டமைப்புடன் அரச பிரதிநிதிகள் கலந்துரையாடல்

Photo Gallery1 Photo By ரொபின்சன் - Wed Mar 09, 2:49 pm

தாயக, இலங்கைச்

மக்களின் கருத்துக்களை அறிவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளது.sam_tna_001
இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் நடைபெற்றுள்ளது.

நாட்டில் ஒரு பொதுவான அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரது கருத்து என்பதனை குறித்த குழுவினர் தம்மிடம் தெரிவித்திருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் அடங்கிய அறிக்கையை மிக விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மக்களின் கருத்துக்களை அறிந்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.