Tuesday, January 16, 2018 02:18:17 AM

இராணுவ மயமாகும் முல்லைத்தீவு மாவட்டம்!

Photo Gallery1 Photo By ரொபின்சன் - Wed Apr 27, 7:49 am

தாயக, இலங்கைச்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினரின் தேவைக்காக காணிகள் அபகரிக்கும் நிலஅளவை செயற்பாடுகளை பொதுமக்கள் பாரளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (8)முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாலுள்ள மக்களுக்குச் சொந்தமான 30 ஏக்கர் காணியை அபகரிப்பதற்காக நிலஅளவை செயற்பாடுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவ்விடத்தில் கூடிய பொது மக்கள் குறித்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாராளுமன்ற உருப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், அன்டனி ஜெகநாதன் உள்ளிட்டோரும் இணைந்து படையதிகாரிகளுடன் நிலஅளவை அதிகாரிகளுடனும் சுமுகமாக பேசி நிறுத்தியுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், நாயாறு உள்ளிட்ட பிரதேசங்களில் படையினரின் தேவைக்காக நேற்று முதல் காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை பொதுமக்களும் அரசியற்கட்சிகளும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.