Sunday, February 18, 2018 10:56:19 PM

கணவர் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கை இருக்கிறதா என பெண்ணிடம் கேட்ட ஆணைக்குழு

Photo Gallery1 Photo By ரொபின்சன் - Wed Apr 27, 7:55 am

தாயக, இலங்கைச்

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு ஏழு வருடத்துக்கு முதல் சொன்ன பதிலையே இப்பொழுதும் சொல்கிறது என பெண் ஒருவர் தெரிவித்தார்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (3)கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போதே அப்பெண் இவ்வாறு கூறியுள்ளார்.

காணாமல் போயுள்ள தனது கணவர் தொடர்பில் தகவல்களை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக தாம் வருகை தந்த போதும் தனது கணவர் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கை இருக்கிறதா என தம்மிடமே ஆணைக்குழு கேள்வியெழுப்புவதாக குறித்த பெண் சாடியுள்ளார்.

அத்துடன், தனது கணவர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எந்தவொரு முடிவையும் வழங்க முடியாது என தெரிவித்த குறித்த பெண், ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் காணாமல் போன தனது கணவர் மீண்டும் கிடைக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.