Wednesday, February 21, 2018 06:11:44 PM

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் துறையுடன் இணைக்க அனுமதி

Photo Gallery1 Photo By BBC Tamil - Tue Apr 26, 9:23 am

இலங்கை அரசுக்கு சொந்தமான விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் துறையுடன் இணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவத்துள்ளார்.

பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ள காரணத்தினாலேயே ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனமொன்றுடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ரணில் கூறியுள்ளார்.

Image copyright
FCA

Image caption

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுடன் நஷ்டத்தில் இயங்கிவருகிறது’

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சந்தித்துள்ள பெரும் நஷ்டத்தால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்றும் ரணில் விக்ரசிங்க எச்சரித்துள்ளார்.

சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுடன் நஷ்டத்தில் இயங்கிவரும் அந்த நிறுவனத்தை பாதுகாப்பதற்கு இன்னொரு தனியார் நிறுவனத்துடன் அதனை இணைப்பது அவசியம் என்று பிரதமர் கூறினார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.