Sunday, February 18, 2018 01:16:07 PM

தில்லியில் உள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம் தீயில் நாசம்

Photo Gallery1 Photo By BBC Tamil - Tue Apr 26, 5:41 am

இந்தியாவின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றான இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தில்லியில் உள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு தீயினால் ஏற்பட்டுள்ள சேதத்தை ஆராய்ந்துவருவதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர் கூறினார்.

மிகவும் அரிதான தாவர-உயிரின வகைகள் அழிந்து போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடினார்கள்.

1978-ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் அரிதான பட்டாம்பூச்சி வகைகள், பாம்பு வகைகள், புலிகள், சிறுத்தைகள் என்று பல வகையான உயிரினங்களும் பாதுகாக்கப்பட்டிருந்தன.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.