Tuesday, September 25, 2018 12:00:02 AM

விஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Aug 20, 1:12 pm

  • Read full article | 
  • Comments Off on விஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு!
  • 37 views

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது பாராளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக, சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை கோரியிருந்தார்.

இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம், தமது ஆலோசனையை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளது.

அதில், “விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு அழைப்பு விடுத்த விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, நிலையியல் கட்டளை விதிமுறைகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிகழ்வு ஒன்றில் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையும் தமது திணைக்களம் ஆய்வு செய்தது என்றும் சபாநாயகருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on விஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு!
  • 37 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar