Monday, September 24, 2018 10:46:59 PM

நேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Aug 16, 9:31 am

  • Read full article | 
  • Comments Off on நேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு!
  • 24 views

நேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்படுகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் கனவிலுள்ள கோத்தபாயவினை முடக்கி வைக்க ரணில் வேகமான காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

கோத்தபாயவின் நேரடி வழிநடத்தலில் ஆட்கடத்தல்கள்,கொலைகளை வழிநடத்தியவராக நேவி சம்பத் கண்டறிப்பட்டிருந்த நிலையில் அவரது கைது தற்போது முக்கியத்துவம் மிக்கதாகியிருக்கின்றது.

இதனிடையே கொழும்பில் பதினொரு தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான எதிரியான முன்னாள் கடற்படைச் சிப்பாய் நேவி சம்பத் மறைந்து வாழ்வதற்கு உதவியாக, ஐந்து இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டிருந்ததாக இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கூறியுள்ளனர். இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதியும் இலங்கை முப்படைகளின் தற்போதைய பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இந்த நிதியை வழங்கியிருந்ததாக இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சென்ற செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நேவி சம்பத் நேற்றுப் புதன்கிழமை நீதிமன்றதில் முன்னிலையானபோது குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இவ்வாறு கூறியுள்ளனர்.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on நேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு!
  • 24 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar