Friday, August 17, 2018 08:39:35 PM

ராஜபக்ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்?

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Aug 01, 4:01 pm

புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

சீன இராணுவத்தின் 91வது ஆண்டு நிறைவையொட்டி, சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் விக்ரமசிங்கவோ அல்லது மூத்த அமைச்சர்களோ அழைக்கப்பட்டமைக்கான காட்சிகளைக் காண முடியவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன மாத்திரம், அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.

ஆனால், குறித்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image

Skip to toolbar