Thursday, January 18, 2018 12:27:46 AM

ஈ.பி.டி.பி.யிலிருந்து முருகேசு சந்திரகுமார் விலகினார்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Mon Apr 18, 6:33 am

chandrakumar EPDPஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) முக்கியஸ்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார், அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

தமிழ்பேசும் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அர்த்தபூர்வமாகச் செயற்படவுள்ளதாகவும், இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகிவரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது இலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியற் சூழ்நிலைக்கு அமைய ஈழமக்கள் ஜனநாயக் கட்சியிலிருந்து விலகி, தனித்துச் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.