Monday, October 22, 2018 06:33:43 PM

ஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வருவேன்: மைத்திரி

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jul 26, 12:36 pm

  • Read full article | 
  • Comments Off on ஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வருவேன்: மைத்திரி
  • 42 views

ஊழலுக்கு எதிராக செயற்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை முதல் இடத்திற்கு கொண்டு வருவதை தமது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பலவீனமுற்று வீழ்ச்சியடைந்திருந்த நீதித்துறையை பலமானதாக கட்டியெழுப்பப் போவதாகவும், அரசியல் அழுத்தம் மற்றும் அரசியல்வாதிகளின் தொலைபேசி அழுத்தத்திற்கிணங்க நீதிபதிகள் வழக்குத் தீர்ப்பை வழங்கும் முறையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களை பலப்படுத்தி புதிய திருத்தங்களை மேற்கொண்டு அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் விசேட திறமை படைத்த அதிகாரிகளை அதற்காக இணைத்துக்கொள்ளப் போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை ஜெகர்த்தா மூலோபாயம் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழுவின் அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தேசிய ரீதியிலான நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on ஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வருவேன்: மைத்திரி
  • 42 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar