Sunday, February 18, 2018 11:03:05 PM

சட்டத்துக்கு முரணாக பனாமா வங்கிகளில் வைப்பிலிட்டவர்களை கைது செய்ய வேண்டும்: ஊழல் எதிர்ப்புக் குரல்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Apr 20, 3:20 am

kaaசட்டத்துக்கு முரணாக பனாமா வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பிலிட்டுள்ள இலங்கையர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊழல் எதிர்ப்புக் குரல் எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குறித்த சட்டவிரோத நபர்களிடம் விசாரணைகளை நடத்தி சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு அல்லது அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய வரிகளை அவர்களிடமிருந்து அறவிடுவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மருதானையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வசந்த சமரசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தை ஏமாற்றும் வகையில் கடந்த பத்து வருடங்களில் கூடுதல் பணம் நாட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மையில் வெளியான பனாமா பத்திர தகவல்களின் படி அமைச்சர் ஒருவரின் ஆலோசகரின் பெயரும் அதில் உள்ளது.

இவ்வாறான நபர்களுக்கு எதிரான விசாரணைகளை மத்திய வங்கி முன்னெடுக்கவேண்டும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.