Tuesday, August 14, 2018 05:16:18 PM

புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Jul 25, 10:11 am

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உரையாற்றியமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

யாழில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சுமார் மூன்று மணி நேரம் விஜயகலாவிடம் விசாரணை நடத்தினர். நேற்று மாலை நான்கு மணிமுதல் ஏழு மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப் புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்படவும் உரையாற்றியிருந்தார்.

இந்த உரைக்கு தென் பகுதியில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் கிளம்பியதால், தனது பதவியை அவர் இராஜினாமா செய்தார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சியும் விசாரணைக்குழுவை நியமித்து விஜயகலாவை விசாரித்து வருகின்றது. இந்நிலையிலே கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரும் அவரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image

Skip to toolbar