Wednesday, December 19, 2018 01:26:39 AM

செம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Jul 25, 10:14 am

  • Read full article | 
  • Comments Off on செம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு!
  • 47 views

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு –செம்மணி பகுதியில் இனங்காணப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் சட்டவைத்திய அதிகாரி தலைமையில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவரது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு தொகுதியே மீட்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பாரிய மனித புதைகுழிகள் இருப்பதான சந்தேகம் தீர்ந்துள்ளது.

1996 படையினரால் யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் அப்பகுதியில் பாரிய பாதுகாப்பு மண் அணையொன்று அமைக்கப்பட்டிருந்தது.அதனுடன் இணைந்ததாக காவலரண்களும் அதில் இலங்கை இராணுவத்தினரும் கடமையில் இருந்திருந்தாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காலப்பகுதியில் இரவு வேளைகளில் படையினர் ஆட்களை குறித்த மண் அணைப்பக்கம் அழைத்துச்செல்வதும் பின்னர் அலறல் சத்தங்கள் கேட்பதும் வழமையான தொடர்கதையாக இருந்திருந்ததாக அயல்குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on செம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு!
  • 47 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar