Monday, November 19, 2018 05:53:33 PM

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jul 12, 12:19 pm

  • Read full article | 
  • Comments Off on தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ
  • 41 views

தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி பேசாமல், வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்யத் தெரியாது என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“தேர்தல்களின் போது, விடுதலைப் புலிகளின் பாடல்களை பிரசாரக் கூட்டங்களில் ஒலிக்கவிடுவது, அவர்களைப் பற்றிப் பேசுவது, அவர்களின் நினைவுச் சின்னங்கள் தொடர்பில் பேசுவது என்று வடக்கிலுள்ள அரசியல்வாதிகள், புலிகளைப் பற்றியே பேசி அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மக்களுக்கு அபிவிருத்திகளைப் பெற்றுத்தருகின்றோம். வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருகின்றோமென அவர்களை முன்னேற்றும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ
  • 41 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar