Friday, July 20, 2018 08:15:59 AM

கச்சாய் பாடசாலை: நடந்ததென்ன?

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Jun 28, 2:36 pm

தென்மராட்சியின் கச்சாய் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தாக்கப்பட்டமை தொடர்பான பொய்ச்செய்தியை ஜக்கிய தேசியக்கட்சி உள்ளுர் பிரமுகரும் அமைச்சர் விஜயகலாவின் எடுபிடியுமான சர்வா என்பவரே பரப்பியதாக கண்டறியப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மாணவி குறித்த சர்வாவின் மகளேயென மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம் சில பத்திரிகைகளில் தென்மராட்சியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர்,மாணவி ஒருவரை கம்பியால் தாக்கி மாணவி வைத்தியசாலையில் அனுமதி என்கின்ற செய்தியை வெளியிட்டிருந்தன.

பாடசாலை மாணவர்களை தண்டிக்கக்கூடாது என்பது மாணவர்கள் மேல் மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகம் என ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் சிறுவர்களை பாதுகாப்பதற்கான பிரகடனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுனிசெவ் கல்விக்கானபெரும் நிதிப்பங்களிப்பை நல்குவதால் அவற்றினுடைய கட்டுப்பாடுகளிற்கு உடன்பட்டே உதவிபெறுவது புதிய கதையல்ல.

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image

Skip to toolbar