Thursday, February 22, 2018 07:23:24 AM

வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மௌனம்: அனந்தி சசிதரன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Jan 23, 4:43 pm

“வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அழுத்தங்களை பிரயோகித்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்தில் மௌனமாக இருப்பதானது,

வடக்கு மாகாண சபையை திட்டமிட்டு புறக்கணித்து முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான உந்துதலை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது. ” என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வும் வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது. இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் ஏறக்குறைய நிறைவடையும் இத்தருணம் வரை வடக்கு மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.

மக்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாகாண சபை நிர்வாகத்தை வேண்டுமென்றே புறக்கணித்து மத்திய அரசின் நிர்வாக கட்டமைப்புகளினூடாக வடக்கில் பொது நிகழ்வுகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதானது இலங்கை அரசின் திட்டமிட்ட சதியாகும்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image