Sunday, February 25, 2018 10:27:42 AM

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய தீர்வுக்காக பிரார்த்திக்கிறேன்; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இரா.சம்பந்தன்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sun Jan 14, 5:06 pm

“தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியதாகவும்,

நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலம் இதயசுத்தியுடனான புரிந்துணர்வையும் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு வழியேற்பட வேண்டுமென இந் நன்நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்துமா கடலின் முத்தென விளங்கும் இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகளுக்கும் தைப்பொங்கல் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன மகிழ்வெய்துகின்றேன்.

இன்று தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் தமிழர் திருநாள் உழவர் பெருநாள் எனப் பெருமைப்படும் தைத்திருநாள் உவகையுடன் கொண்டாடப்படுகின்றது. இப்பூவுலகில் பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. அத்தகைய மாற்றங்களுக்கு சூரிய பகவானே காரணியாகின்றார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.