Saturday, January 20, 2018 09:27:35 PM

மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படும்: ரணில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Jan 09, 11:39 pm

“சண்டே லீடரின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 9 ஆண்டுகளும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளும் கடந்து விட்டன.

மஹிந்த ராஜபக்ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசாங்கம் இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஊழல் நிறைந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நல்லாட்சிக்காக அரசியல் போராட்டத்தில் கைகோர்தோம். நாங்கள் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமானால், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி எமக்கு வாக்களிக்குமாறு வேண்டியிருந்தோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றி, அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத வன்முறையை ஒழிப்பதற்கும், நமது சட்ட முறைமை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு முறையின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதியளித்தோம்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image