Saturday, January 20, 2018 09:42:29 PM

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி 23, 24ஆம் திகதிகளில்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Jan 09, 11:45 pm

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

திருவிழா தொடர்பான கலந்துரையாடல் யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் முன்னெடுக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான திட்டங்களை வகுக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை, தமிழக மீனவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் நிகழ்வாக கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா அமைந்துள்ளது….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image