Monday, December 11, 2017 09:58:12 PM

சமஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு நான் தயாரில்லை: மைத்திரிபால சிறிசேன

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Nov 29, 11:28 am

“நாட்டுக்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை. ஆகவே, சமஷ்டி அதிகாரத்தினையோ அல்லது நாடு பிளவுபடக்கூடிய அதிகாரங்களையோ வழங்க நான் தயாராக இல்லை.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடு பிளவுபடாத அரசியல் தீர்வுடன் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்வதுடன் சகல மக்களும் சமாதானம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வுடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே தனது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலின் நம் சன் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவத்தினரையோ அல்லது தேசிய பாதுகாப்பினையோ பலவீனப்படுத்துவதற்காக தான் நாட்டை பொறுப்பேற்கவில்லை. சர்வதேசத்தினை வெற்றிகொள்வதற்கு காணப்பட்ட சவாலினையே நான் முதலாவதாக நிறைவேற்றினேன்….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image