Sunday, February 18, 2018 01:12:31 PM

குடிநீருக்குப் போராடி தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு

By BBC Tamil - Tue Apr 05, 9:28 am

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான வெலிவேரிய ரத்துபஸ்வலவில் 2013ஆம் ஆண்டு பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

Image copyright
Getty

Image caption

மக்கள் சுத்தமான தண்ணீர் கேட்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க வந்த பாதுகாப்பு பிரிவினர்

2013ஆம் ஆண்டு மே மாதம் தங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படிக்கோரி, வெலிவேரிய ரத்துபஸ்வல கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீதியிலிருந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மஹிந்த ராஜபக்ஷ அப்போது ஆட்சியிலிருந்து நிலையில், போராட்டம் நடத்திய மக்களை கலைப்பதற்காக பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர்.

பாதுகாப்பு பிரிவினரின் இந்த நடவடிக்கையால், பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.

Image caption

சம்பவத்தில் கொல்லப்பட்ட மூவர்

மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் காட்சியும் சமூக வலைத்தளங்களிலில் வெளியாகியிருந்த நிலையில், இந்த சம்பவம் முந்தைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

Leave a Reply

Comments are closed on this post.